சேமமடுவில் பிறந்து வாழ்ந்த நாம் இன்று இளமைப்பருவத்தைத் தாண்டி
முதுமையடைந்து வருகின்றோம். என்றாலும் நாம் இளைஞர்கள் என்ற நினைப்புடனேயே வாழ்கின்றோம். நாம் எங்குதான் வாழ்ந்தாலும், எப்படியான உயர்நிலையில் இருந்தாலும் எமது எண்ணத்தில் நின்று நிலைத்திருப்பவை, நாம்பிறந்த ஊரும், எமது சிறுபிராயத்தில் ஓடிவிளையாடிய இடங்களும், படித்த பாடசாலைகளும், எமது சிறுபராய நண்பர்களுமே.
 
இன்று நாம் எமது ஊரைப்பிரிந்து நாட்டைவிட்டு எங்கெல்லாமோ சிதறி வாழ்கின்றோம். நாம் இளைஞர்களாய் இருந்த பொழுது குழந்தைகளாகவும் சிறார்களாகவும் இருந்தவர்கள் இன்று இளைஞர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஓர் உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் முகமாகத்தான் இந்தப் பரீட்சார்த்த இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம்.

எம் இனத்தின் வேர்களைமட்டும் தேடுவதை விடுத்து எங்கள் விழுதுகளையும் அடையாளம் காண வேண்டும் என்பதே எமது நோக்கம்.
எம்மண்ணின் நினைவுகளை மீட்டுப்பார்க்க விரும்பும் பலஉறவுகளும் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். தாய்மண்ணின் மடியில் நாம் கண்டும,; கேட்டும், உணர்ந்து அனுபவித்தவைகள் இன்றும் எமது நினைவுகளில் நீங்காமல் ரீங்காரமிடுகின்றன.

எமது உறவுகளே! உங்கள் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும், மற்றும் பல தகவல்களையும் எம்முடன் இத்தளம் ஊடாகப் பரிமாறுங்கள்.
தொடர்ந்து இத்தளத்தில் உலாவாருங்கள்.

                      நன்றி
கா.தர்மலிங்கம்.




Leave a Reply.